Microsoft-Office-PowerPoint

இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள் (Presentation Software)

மென்பொருளின் பெயர் உற்பத்தி நிறுவனம் திறந்த மற்றும் இலவசமானதா? /
பணம் செலுத்த வேண்டியதா?
Apple KeynoteApple Incபணம் செலுத்த வேண்டியது
Corel Presentation Corel Corporationபணம் செலுத்த வேண்டியது
LibreOffice Impress Document Foundationஇலவச மென்பொருள்
Microsoft PowerPoint Microsoft Corporationபணம் செலுத்த வேண்டியது
Open Office. org Impress Apache Corpஇலவச மென்பொருள்

இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள் என்பது ஒரு குறிப்பிட்ட தலைப்பு அல்லது நிகழ்வு தொடர்பாக தொகுக்கப்பட்ட விடயங்களை ஒழுங்கு முறையாக ஏனையோருக்கு எடுத்துரைக்க உதவும் பல்லூடக தன்மைகளை உள்ளடக்கிய கணினி மென்பொருள் ஆகும்.

பிரபல்யமான இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள்கள் பல காணப்படு கின்றன. இவற்றுள் இலவசமாகப் பெறத்தக்க மென்பொருள்கள் (Free and Open Source Software) எனவும் பணம் செலுத்தி பெறத்தக்க மென்பொருள்கள் (Commercial Software) எனவும் இரு வகைகள் உள்ளன.

இதற்கு மேலதிகமாக உங்களது கணினியில் அலுவலக மென்பொருள் (Office Software) உள்ளடக்கப்பட்டிருக்காவிடின் உங்களுக்கு இலத்திரனியல் நிகழ்த்து கையை தயாரிப்பது கடினமாகும். எனினும், இணையதளத்தினுள் பிரவேசித்து Cloud Services இன் உதவியுடன் அதற்கான வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக Ms Office 365 PowerPoint , Google Presentation, Microsoft sky Drive PowerPoint போன்ற ஏதாவது ஒன்றில் பிரவேசித்து உமது தேவையை நிறைவு செய்து கொள்ளலாம். அதுமட்டுமன்றி உரிய கோவையைச் சேமிக்கும் (Save) வசதிகளும் இவற்றில் காணப்படுகின்றன.

இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள்களில் உள்ளஅடிப்படை அம்சங்கள்

அலுவலக மென்பொருள் தொகுதி ஒன்றிலுள்ள Microsoft PowerPoint மூலமும் LibreOffice தொகுதியிலுள்ள Impress இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள்கள் ஊடாகவும் இலத்திரனியல் நிகழ்த்துகை ஒன்றை எவ்வாறு தயாரிக்கலாமென கீழே காட்டப்பட்டுள்ளது.

Microsoft Office PowerPoint இனை ஆரம்பித்தல்

MS PowerPoint 2010 ஐ பின்வருமாறு ஆரம்பிக்கலாம்.

  • Start-> All programs > Microsoft Office -> Microsoft Office PowerPoint 2010 (பணிசெயல் முறைமைக்கமைய வேறுபடலாம்).

மேலே, உருவில் இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருளின் முகப்புத் திரையில் உள்ள பட்டியல் மற்றும் கருவிப்பட்டைகள் (Tool bar) சில காட் டப்பட்டுள்ளன. இதில் உள்ள பல்வேறு கட்டளைகள் சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருளிலும் இடம்பெறுகின்றன.

  1. விரைவு நுழைவுக் கருவிப்பட்டை (Quick access Tool Bar)

தலைப்பு நிரையின் இடப்பக்க இறுதியில் அமைந்துள்ளது. இது இலகுவாகவும் வேகமாகவும் இயங்கக் கூடியது. அடிக்கடி தேவைப்படும் விடயங்களை இதனுள் சேமித்து வைக்கக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வரியின் வலப்பக்க தலைப்பின் வலப்பக்க அம்புத்தலையினை கீழ்நோக்கிச் செலுத்துவதனால் கிடைக்கும் பட்டியல் மூலம் மேலும் பல விடயங்களைச் சேர்த்துக்கொள்ள முடியும். இதனைப் பயநரின், தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளமுடியும்.

  1. தலைப்புப் பட்டை (Title Bar)

இடைநிலை முகப்பின் மிக உயரத்தில் இது காணப்படுகின்றது. மென்பொருளின் பெயர் மற்றும் திறக்கப்பட்டுள்ள நிகழ்த்துகையின் பெயர் என்பன இதில் காட்சிப்படுத்தப்படும். திரையின் சிறிதாக்கல் பொத்தான் (Minimize), பெரி தாக்கல் பொத்தான் (Maximize), மூடு பொத்தான் (Close) போன்றன வலதுபக்க மேல் மூலையில் காணப்படும்.

  1. தத்தல் (Tab)

மென்பொருளில் காணப்படும் கருவிப்பட்டை , நாடா (Ribbon) என அழைக் கப்படும். நாடாவில் உள்ள ஒவ்வொரு தத்தல்களுக்கும் உரிய இலச்சினைகள் படவுருக்களாக (Icons) தென்படும். உதாரணமாக Home எனும் பகுதியில் பல பிரிவுகள்காணப்படுகின்றன. இதில் ஒரு பிரிவே எழுத்துருக்கள் ஆகும். இதனுள்ளே எழுத்துருக்களுக்குரிய பல கருவிகள் காணப்படும். (உரு 8.5 ஐப் பார்க்க). இலகுவாக பயன்படுத்தத்தக்க விதமாக இந்த நாடா தயாரிக்கப்பட்டிருக்கிறது.

  1. நாடா (Ribbon)

பட்டியல் Menu என அழைக்கப்படும். இது மிக இலகுவாக பரிசீலிக்க முடியுமான விதமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விடயத்துக்கும் தேவையான படவுருக்கள் (Icons) தெளிவாகக் காணப்படுவதோடு அவை ஒரு குழுமமாகவும் தென்படுவது இதன் சிறப்பம்சமாகும். மேலும், அவற்றின் செயற்பாடுகள் இலகுவாக்கப்பட்டுள்ளதோடு பரிசீலனை செய்வதற்கு பொருத்தமாகவும் உள்ளது.

  1. படவில்லை சாளர அடுக்கு (Slide Pane)

சதுரத்தின் இடப்பக்க மேல் மூலையில் இது அமைந்துள்ளது. இதனை தேர்ந் தெடுக்கும்போது சட்டகம் மிகச் சிறிதாகவே தென்படும். தேவையான சிறிய சட்டகத்தின் மீது சுட்டியைத் சொடக்கும்போது பெரிதாகி உரிய படச்சட்டகம் தென்படும். அப்போது உரிய சட்டகத்தினை வடிவமைக்கவோ நிறைவு செய்யவோ முடியும்.

  1. பணியிடப்பரப்பு (Work Space)

இலத்திரனியல் நிகழ்த்துகை இவ்விடத்திலேயே தயாரிக்கப்படுகின்றது.

  1. கொள்பணி சாளர அடுக்கு (Task Pane)

இலத்திரனியல் நிகழ்த்துகை தயாரிக்கப்படும்போது மாற்று வழிகளை தேர்ந் தெடுக்க இச்சதுரம் முக்கியமாகும். உதாரணமாக அசைவூட்டங்களை உட்புகுத்து வதற்கு இது அவசியப்படுகின்றது.

  1. குறிப்பு சாளர அடுக்கு (Notes Pane)

இலத்திரனியல் நிகழ்த்துகைக்குரிய படவில்லையில் தேவைப்படும் குறிப்புக் களை எழுதப் பயன்படுத்தப்படும். இவ்வாறு உட்புகுத்தப்படும் குறிப்புக்கள் நிகழ்த்துகையின்போது பெரும்பாலும் பார்வையாளர்களுக்குத் தெரியமாட்டாது.

  1. நிலைமைப் பட்டை (Status Bar)

இலத்திரனியல் நிகழ்த்துகையில் தயாரிக்கப்பட்டுள்ள படவில்லைகளின் எண் ணிக்கைள் தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படவில்லையின் இலக்கம், மொழி மூலம் ஆகியன இதில் தென்படும்.

  1. காட்சித் தத்தல் (View Tab)

MS Office சட்டகத்தில் படவில்லை தென்படும் விதத்தினை இந்தக் காட்சிப் பட்டையில் படவுரு (Icon) மூலம் பரிமாற்றப்படுகின்றது. இதனை பின்வரும் படத்தின் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

  • சாதாரண பார்வை (Normal view)

இடைநிலை முகப்பில் படவில்லை இவ்வாறே தென்படும். இந்த சாதாரண பார்வையில் இருந்து சாதாரண நிகழ்த்துகையினைத் தயாரிக்கலாம்.

  • படவில்லைகளின் வகைப்படுத்தல் பார்வை (Slide sorter view)

நிகழ்த்துகையினுள் அடங்கியுள்ள சகல படவில்லைகளும் சிறிதாகத் தென்படும். இதன் மூலம் அவற்றின் ஒழுங்கமைப்பை தேவைப்படின் மாற்றி அமைக்கலாம். மீண்டும் Normal View இற்கு உட்புகுத்த வேண்டிய படவில்லை மீது சொடக்குவதன் மூலம் அதனைப் பெற்றுக் கொள்ள முடியும்.

  • வாசிப்புப் பார்வை (Reading view)

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட வில்லையினை முழுமையாக இதன்மூலம் பார்க்க முடியும். படவில்லையினுள் உள்ள சகல தக வல்களையும் இதில் பார்க்கலாம். இதிலிருந்து வெளியேறுவதாயின் Esc சாவியை அழுத்த வேண்டும்.

  • முழுமையான பார்வை (Slide show)

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட வில்லையினை இதன் மூலம் முழுமையாக அவதானிக்க முடியும். இலத்திரனியல் நிகழ்த்துகையினைப் பார்வையாளர்களுக்கு முன்வைக்க இது உதவுகின்றது. இதற்கு மேலதிகமாக F5 சாவியினை அழுத்துவதன் மூலம் நிகழ்த்துகையினை ஆரம்பம் முதல் பார்வையிடலாம்.

  1. உருக்கட்டுப்பாட்டுக் கருவி (Zoom control)

நிகழ்த்துகையினுள்

உள்ளவற்றைப் பெரிதாக்கியும் சிறிதாக்கியும் பார்க்க உதவும்.