Microsoft-Office-PowerPoint

இலத்திரனியல் நிகழ்த்துகை பற்றிய அறிமுகம்

Presentation என்பது “நிகழ்த்துகை”, “அறிக்கை அளிக்கை”, “முன்வைத்தல்’, ”சமர்ப்பித்தல்” போன்ற பல்வேறு கருத்துக்களில் விளக்கப்படுகின்றது. “குறிப்பிட்ட ஒரு நபர்…

அறிமுகம்

Presentation என்பது “நிகழ்த்துகை”, “அறிக்கை அளிக்கை”, “முன்வைத்தல்’, ”சமர்ப்பித்தல்” போன்ற பல்வேறு கருத்துக்களில் விளக்கப்படுகின்றது. “குறிப்பிட்ட ஒரு நபர் அல்லது பலர் தமது எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் அறிவினை ஒரு பெரும் கூட்டத்தாருடன் பரிமாற்றிக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சி” நிகழ்த்துகை எனப்படும். இச்சந்தர்ப்பத்தில் அவர்கள் பல்வேறு நுட்பங்கள், அங்க அசைவுகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி பார்வையாளர்களை அறிவுறுத்த முயற்சிக்கின்றனர்.

அண்மைக் காலத்தில் பெரிதும் பயன்படுத்தப் படும் உபகரணங்களாக வழுக்கி எறிவை (Slide projector) மற்றும் மேந்தலை எறிவை (Overhead projector) என்பவற்றைக் குறிப்பிடலாம். மேந்தலை எறிவையின் பயன்பாட்டினை விட வழுக்கி எறிவையின் பயன்பாடு வித்தியாசமானது. விரிவுரையொன்றின்போது விளக்கத்துக்காகப் பயன் படுத்தப்படும் ஊடுபுகவிடும் தாள்களை (Transparency Sheet) மேந்தலை எறிவையில் பயன்படுத்த முடிவதோடு உரு அதில் தேவைப்படின் எழுதி விளக்கமளிக்கவும் முடியும். ஆனால், தயாரிக்கப்பட்ட ஊடுபுகவிடும் தாள்களை மீளப் பயன்படுத்த முடியாது. அத்துடன் அசைவூட்டத்தினை அல்லது ஒலியினை ஏற்படுத்த முடியாது. ஆனால், இதனை இலகுவாக பயன்படுத்த முடியும். இவ்வாறு தொழினுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமான நிகழ்த்துக்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. வழுக்கி எறிவையை பயன்படுத்தும்போது உரிய படவில்லையை தயாரிப்பதற்கென மேலதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது. புகைப்படம் ஒன்றினைப் புகைப்பட ஆய்வுக்கூடத்தில் மீள ஒழுங்கமைத்ததன் பின்னரே இவ்வுபகரணத்தினால் பயன்படுத்தமுடியும். எனினும், இதில் அசையும் படங்களையும் ஒலியினையும் உட்புகுத்த முடியாது.

கணினி தொழினுட்ப மற்றும் இலத்திரனியல் தொழினுட்ப முன்னேற்றத்தின் விளைவாக ஒளியுருக் கமரா (Video Camera) மற்றும் பல்லூடக எறிவை (Multimedia projector) போன்றவற்றைப் நிகழ்த்துகையாளர்கள் பயன்படுத்துகின்றனர்.

பல்லூடக எறிவை மூலம் நிகழ்த்துகைகளை நிகழ்த்தும் பயன்பாடு சமகாலத்தில் பிரபல்யம் அடைந்துள்ளது. இதனைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிகழ்த்து கைகள் மிகக் குறுகியகால எல்லைக்குள் நிறைவடை கின்றன. பல்லூடகங்கள் என இனங்காட்டப்படும் இலக்கங்கள், எழுத்துக்கள், படங்கள், சித்திரங்கள், படிமங்கள் (Images), அட்டவணைகள், வரைபுகள், ஒலிகள் மற்றும் அசைவூட்டங்களும் ஒளியுருக்களும் (Animation and Videos) போன்றவற்றை இலத்திரனியல் நிகழ்த்துகைகளினுள் உட் புகுத்த முடிகின்றன.

இவ்வாறு உருவாக்கப்படும் நிகழ்த்துகைகள் பல்லூடக இலத்திரனியல் நிகழ்த்துகைகள் என அழைக்கப்படுகின்றன. பல்லூடக இலத்திரனியல் கருவிகள் நவீன தொழினுட்ப வளர்ச்சியின் காரணமாக மிகச்சிறிய வடிவத்திலும் பல்வேறு வசதிகளுடனும் அமையப் பெற்றுள்ளன.

தரமான இலத்திரனியல் நிகழ்த்துகை ஒன்றின் இயல்புகள்

நாம் முன்வைக்கும் கருத்துக்களை உரிய முறையில் பார்வையாளர்கள் விளங்கிக் கொள்வதற்கு இலத்திரனியல் நிகழ்த்துகையொன்று அவசியமாகும். இலத்திரனியல் நிகழ்த்துகையொன்றின் உள்ளடக்கம் தொடர்பாகக் கூடிய கவனம் செலுத்துவதன் மூலம் அதன் தரத்தினை அதிகரித்துக் கொள்ளமுடியும். இத்தரத்தினை அதிகரிக்கத் தேவைப்படும் விடயங்கள் என்னவென்பது பற்றிக் கீழே கலந்துரையாடுவோம்.

  • உள்ளடங்கியிருக்க வேண்டிய வாக்கியங்கள் மற்றும் வரிசைகளின் அளவு

எழுத்துக்களின் அளவைப் போலவே படவில்லை (Slide) ஒன்றினுள் உள்ளடங்க வேண்டிய வாக்கியங்களின் எண்ணிக்கையும் முக்கியமாகும். ஒரு படவில்லை யினுள் பெரும்பாலும் ஆறு முதல் ஒன்பது வரையிலான வாக்கியங்களே உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு மேலதிகமாக வாக்கியங்களை
உள்ளடக்கும்போது எழுத்துக்களின் அளவு சிறிதாகி பார்வையாளர்களால் வாசித்து விளங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

  • எழுத்துக்களின் அளவு

இலத்திரனியல் நிகழ்த்துகை படவில்லையினுள் அடங்குகின்ற வாக்கியங்கள், எழுத்துகளின் அளவு மட்டுமன்றி நிகழ்த்துகைக்கும் பார்வையாளர்களுக்குமான இடைவெளி என்பனவும் முக்கியமாகும். எழுத்துக்களின் அளவு 32 Points அல்லது அதைவிடப் பெரிதாக இருக்கவேண்டும். அப்போது நிகழ்த்துகையில் உள்ள விடயங்களைப் பார்வையாளர்கள் தெளிவாக வாசிக்க முடியும்.

சிறிது சிந்தியுங்கள் நீங்கள் அவதானித்த இலத்திரனியல் நிகழ்த்துகைகளில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எந்த அளவு பேணப்பட்டிருந்தன என்பதை சிந்தித்துப் பாருங்கள். எதிர்காலத்தில் நீங்கள் காணப்போகும் நிகழ்த்துகைகளில் கூட, இவை எந்த அளவு பேணப்பட்டுள்ளன என்பதைப் பரிசீலிக்கத் தவறாதீர்கள்.

  • எழுத்து வடிவமும் மொழிப் பிரயோகமும்

தயாரிக்கப்பட்ட இலத்திரனியல் நிகழ்த்துகைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துக்களும் மொழிநடையும் பிழையின்றித் தெளிவாகக் காணப்படுகின்றனவா என்பதை அவதானிக்க வேண்டும்.

  • படங்கள், சித்திரங்கள், அட்டவணைகள் மற்றும் வரிப்படங்களை உட்புகுத்தல்

படங்கள், சித்திரங்கள், அட்டவணைகள், வரிப்படங்கள் போன்றவற்றை உட் புகுத்துவதாயின், ஒரு படவில்லையினுள் ஆகக்கூடியது இரண்டை மாத்திரமே உட்புகுத்த முடியும். அதற்கு மேலதிகமாக இவற்றை உட்புகுத்துவதன் மூலம் தெளிவின்மை ஏற்படும்.

  • நிறங்களைப் பயன்படுத்தல்

இலத்திரனியல் நிகழ்த்துகையின்போது பயன்படுத்தப்படும் நிறங்களும் மிக முக்கியமாகும். முக்கியமான விடயங்களை கடும்நிறங்கள் (Dark Colour), தடிப்பான எழுத்துக்கள் மற்றும் வித்தியாசமான எழுத்து வடிவங்கள் மூலம் தெளிவுபடுத்தலாம். சிவப்பு வர்ணத்தை படவில்லை முழுவதும் பயன்படுத்துவது பார்வையாளர்களுக்கு அசௌகரியமாகும். ஆனால், முக்கியமான ஒரு விடயத்தை, எழுத்தை, அடையாளத்தை சிவப்பில் காட்டுவது பிழையன்று. எவ்வாறெனினும் நிறங்களைப் பயன்படுத்துவது போலவே அவற்றின் பொருத்தப்பாடு பற்றியும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

  • அசைவூட்டம் மற்றும் ஒளியுருக்கள்

அசைவூட்டம் மற்றும் ஒளியுருக்களை (Animation and Videos) உட்புகுத்து வதாயின் ஒரு படவில்லையில் ஒன்றை மாத்திரம் உட்புகுத்துவது பொருத்தமான தாகும். இல்லையெனில் அவற்றுக்கு உட்புகுத்தியுள்ள ஒலியின் தாக்கத்தினால் பார்வையாளர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும்.

  • நோக்கங்களைக் கருத்திற் கொள்ளல்

பல்லூடகத்தை பயன்படுத்தும்போது பார்வையாளர்களின் நோக்கங்களை கருத் தில் கொள்ளல் முக்கியமாகும். இலத்திரனியல் நிகழ்த்துகை மூலம் எதிர்பார்க்கும் கருத்துகளுக்கு புறம்பாக வித்தியாசமான விடயங்களின் பக்கம் பார்வையாளர்களை திசைதிருப்பாத விதமாக பல்லூடகங்களின் உள்ளடக்கம் இருத்தல் அவசியம். உதாரணமாக அசைவூட்டங்களை அளவுக்கதிகமாகப் பயன்படுத்துவதன் மூலம் பார்வையாளர்களின் கவனம் திசைதிருப்பப்பட்டு நிகழ்த்துகையின் நோக்கங்கள் நிறைவேறாமல் போகும்.