Microsoft-Office-PowerPoint

Microsoft PowerPoint மென்பொருளைப் பயன்படுத்தி ஆவணமொன்றினைத் தயாரித்தல்

படவில்லை அளவினை (Slide Size) ஒழுங்கமைத்தல்

இலத்திரனியல் நிகழ்த்துகையின்போது படவில்லையின் அளவு (Slide Size) தேவைக்கேற்ப ஒழுங்கமைக்கப்படும். மேலும் பட வில்லையின் வகை, நீளம், அகலம், அளவு, போக்கு (Orientation) போன்றன இதன் மூலம் ஒழுங்கமைக்கப்படுகின்றன.

  • Design – Page Setup

படவில்லைத் தளக்கோலம் (Slide layouts)

பக்கத்தினைப் போதுமான அளவுக்கு தயார்செய்ததன் பின்னர் தயாரிக்க எதிர்பார்க்கும் நிகழ்த்துகையின் தளக்கோலத்தை (Office Theme / Slide layouts) தேர்ந் தெடுக்க முடியும். இவ்விடயத்தில் Ms Office இற்கும் LibreOffice இற்கும் இடையில் சிறு வித்தியாசம் உண்டு.

Home –> New Slide அல்ல து Layout –> Office Theme அதன் பக்கமாகக் கிடைக்கும் Office Theme சட்டகத் தின் ஓர் திரை வடிவத்தினை பார்க்க . நிகழ்த்துகைக்கு அவசியமான தளக் கோலங்கள் சிலவற்றை இதன் மூலம் தேர்ந்தெடுக்கலாம். வேறு தளக் கோலங்களை பெற்றுக்கொள்ள Slides From Outside பட்டியின் மூலம் முடியும். Reuse Slide பட்டியினை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட காட்சிகளை நிகழ்த் துகைக்குள் உட்புகுத்த முடியும்.

இலத்திரனியல் நிகழ்த்துகை ஒன்றினைத் தயாரிக்கவென அமைக்கப்பட்ட ஆரம்ப படவில்லை தளக்கோலத்திற்கு (Slide Layout) தலைப்பொன்றை வழங் குவதற்கு தளக்கோலம் ஒன்றை தேர்ந்தெடுக்குக. இதற்கென Title slide எனும் தளக்கோலத்தை தேர்ந்தெடுப்போம். இனி உங்களது இலத்திரனியல் நிகழ்த்து கைக்கான தலைப்பையும் உபதலைப்பையும் தட்டச்சுச் செய்க.

Home –> New Slide அல்லது Layout Office Theme ஐ தெரிவு செய்க. மேலும் ஒரு புதிய தளக்கோலத்தை உட்புகுத்துக. பட்டியல் பட்டையிலுள்ள Slide show from beginning ஐ சொடக்கவும். இச் சந்தர்ப்பத்தில், நிகழ்த்துகை முழுத்திரை யிலும் தெரியவரும் F5 சாவியை அழுத் துவதன் மூலமும் இதனைப் பெற்றுக் கொள்ள முடியும். நிகழ்த்துகையினை இச் சந்தர்ப்பத்தில் அவதானிக்கலாம். மீண்டும் சுட்டியை சொடக்கி ஆரம்பத் திரைக்கு வரவும்

இலத்திரனியல் நிகழ்த்துகையினை சேமித்தல் (Saving)

File -> Save as -> Folder Name -> File Name (கோவைக்கு (File) பெயர் ஒன்றைத் தட்டச்சு செய்க) -> Save (இதன் மூலம் உங்களது இலத்திரனியல் நிகழ்த்துகையினை கணினியினுள் நிலையாக சேமித்துக் கொள்ளவும் தேவையேற்படும்போது மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் அதனை திறந்து கொள்ளவும் முடியும்).

File – Save as –> My Documents  –> File Name (File இன் பெயரை தட்டச்சு செய்க) Save → (அப்போது கணினியினுள் நிரந்தரமாக நிரந்தரமாக சேமிக்க முடியும்).

தயாரித்த நிகழ்த்துகையினை மீளத் திறத்தல் (Open an Existing Presentation)

Start –>All Programs -> Microsoft Office -> Microsoft Office PowerPoint 2010 -> File –> Open

சேமித்த (Save) நிகழ்த்துகையின் பெயரைக் குறிப்பிட்டு மீளத் திறந்து (Open) கொள்க.

படவில்லையின் பின்ன ணி (Slide Background)

நீங்கள் தயாரித்த இலத்திரனியல் நிகழ்த்துகைக்குத் தேவையான படவில்லை பின்னணியை (Slide Background) அமைப்பதற்கு மென்பொருளில் வசதிகள் உண்டு. பல்வேறு நிறங்கள், படங்கள், சித்திரங்கள் மற்றும் அமைப்புக்களை உட்புகுத்தக்கூடிய வசதிகளும் காணப்படுகின்றன.

  • Design- Background Styles
  • Background Styles இல் உள்ள வடிவங்களை படவில்லையின் பின்னணியாக அமைத்துக் கொள்ள முடியும்.

Background- Format Background (இதன் மூலம் பல்வேறு நிறங்கள், படங்கள் அல்லது சித்திரங்கள் மற்றும் அமைப்புக்களை உட்புகுத்திக் கொள்ளமுடியும்).

இலத்திரனியல் நிகழ்த்துகை படவில்லைக்கு எழுத்துக்களை சேர்த்தல் (Adding Text)

  • படவில்லையினுள் Click to Add  Title எனும் பெயரில் உள்ள இடம் Place holder எனும் பெயரில் அழைக்கப்படுகின்றது. அதன் மீது சுட்டியைச் சொடக்குவதன் மூலம் தட்டச்சு செய்யலாம்.

Place holder இல்லாத இடத்தில் தட்டச்சு செய்தல்.

  • Insert – Text box பாடப்பெட்டி (Text box) கட்டளையை சொடக்கினால் தென்படும் காட்சிச் சட்டத்தினை உரிய இடத்தின் மீது இழுக்கவும் Drag பின்னர் தேவையான பந்தியை தட்டச்சு செய்யவும். MS Word இல் நீங்கள் அறிந்துக்கொண்ட எழுத்துருக்களை இதில் பிரயோகிக்கலாம்.

படவில்லையினுள் உருக்களை உட்புகுத்தல் (Insert Object)

எழுத்துக்களை தட்டச்சு செய்ய முன்னர் அல்லது பின்னர் உருக்களை (Object) உட்புகுத்த முடியும். அவற்றில் சில பின்வருமாறு

  • உருக்கள் / வடிவங்கள் (Shapes / Objects)
  • முன் ஆயத்தப் படம் (Clip art)
  • படங்க ள் (Pictures)

வடிவங்கள் / உருக்களை உட்புகுத்தல் (Shapes / Objects)

Insert – Illustration -Shapes வடிவங்க ளைத் தெரிந்தெடுத்து பெறப்படும் பட்டியல் மூலம் தேவையான அலங்காரங்களை தெரிந்து அவற்றின் மீது சுட்டியைச் சொடக்கி காட்சிச் சட்டகத்தின் உரிய இடத்துக்கு இழுத்துக் கொள்ளவும் (Drag). அதன் பின்னர் அதனைச் சுற்றியுள்ள சிறிய சதுரத்தினுள் சுட்டியைச் சொடக்கி இழுப் பதன் மூலம் போதியளவிற்கு பெருப்பித்து அல்லது சிறுப்பித்துக் கொள்ளலாம்.

வடிவங்க ளது நிறங்களை மாற்றுதல் (Changing the colour of Shapes | Objects)

பல்வேறு வகையான வடிவங்களையும் உருக்களையும் இலத்திரனியல் நிகழ்த்துகை படவில்லையினுள் இழுத்தெடுத்து தேவையான மாதிரிகளை அல்லது எழுத்து உருவங்களை அமைத்துக் கொள்ள முடியும். இதற்கெனப் பின்வரும் படிமுறையினைக் கையாளலாம்.

உரிய வடிவத்தின் மீது சுட்டியை வைத்து வலப்பக்க பொத்தானைச் சொடக்கவும். அதன் மூலம் பெறப்படும் Format Shapes சதுரத்தில் உள்ள மாற்றீடுகளை பயன்படுத்தி பொருத்தமான நிறங்கள், படங்கள், அலங்காரங்களை சேர்த்துக் கொள்ளலாம்.

படவில்லையில் ஆயத்தப் படத்தினை (Clip Art) உட்புகுத்தல் (Inserting ClipArt / Gallery theme) மென்பொருள் ஊடாகவே உருவாக்கப்பட்ட பல்வேறு முன் ஆயத்தங்களை தேர்ந்தெடுத்து இலத்திரனியல் நிகழ்த்துகையினுள் உட்புகுத்த முடியும். இதற்கென பின்வரும் படிமுறைகளைக் கையாளலாம்.

Clip Art & Insert (Images) Clip Art (இதன் மூலம் பெறப்படும் சதுரத்தில் Search for இல் பொருத்தமான Clip Art வகை யின் பெயரைத் தட்டச்சு செய்க. பின்னர் கிடை க்கப் பெறும் Clip Art மீது சொ டக்குக). பின்னர் அதனைச் சூழவுள்ள சிறிய சதுரத் தின் மீது சுட்டியைச் சொடக்கி இழுத்துச் (Drag) செல்வதன் மூலம் தேவையான அளவுக்குச் கூட்டிக் குறைக்க முடியும்.

படங்களை உட்புகுத்தல் (Inserting Pictures)

கணினியின் மூலம் அல்லது வேறு வழிகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பல்வேறு படங்களை இலத்திரனியல் நிகழ்த்துகை ஒன்றினுள் உட்புகுத்த முடியும்.

  • Inserting Picture (கிடைக்கப் பெறும் சதுரத்தைப் பயன்படுத்தி பொருத்தமான படத்தினை உட்புகுத்துக).
  • முன்னரைப் போன்று அதனைச் சூழவுள்ள சிறிய சதுரத்தின் மீது சுட்டியை சொடக்கி இழுத்துச் செல்வதன் மூலம் பொருத்தமான அளவைக் கூட்டிக்குறைத்து பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு படவில்லையில் இருந்து இன்னொரு படவில்லைக்கு மாறும் காட்சிகளை உட்புகுத்த ல் (Inserting Slide Transition Effects)

  • Transition (Transition to this Slide) இல் உள்ள பொருத்தமான அலங்காரத்தை தேர்ந்தெடுத்து சட்டத்துக்குப் பொருத்த மான அசைவூட்டங்களை உட்புகுத்தி கவர்ச்சிப்படுத்துக.
  • Transition to this Slide → Effect Options மூலம் பல தரப்பட்ட வடிவங் களையுடைய அசைவூட்டங்களின் செயற் பாட்டினை அறிந்து கொள்ளுங்கள்.
  • Transition – Sound மூலம் தேர்ந்தெடுத்த அலங்காரத்துக்கு ஒலியுருவினை (Sound Clip) உட்புகுத்துக.
  • Transition → Sound → Apply to All Slides மூலம் தேர்ந்தெடுத்த சகல ஒலி யுருக்களையும் நிகழ்த்துகையின் சகல படவில்லைகளுக்கும் உட்புகுத்த வேண் டுமா எனத் தீர்மானிக்கவும்.

அசைவூட்டங்களை உட்புகுத்தல் (Inserting Animation)

படவில்லை ஒன்றினுள் உட்புகுத்தப்பட்டுள்ள பந்திகள், அலங்காரங்கள், சித்திரங்கள் போன்ற எதனையும் அசைவூட்டத்திற்கு உட்புகுத்த முடியும். இதற்குரிய விடயத்தைச் சுட்டியினால் தேர்ந்தெடுத்து பின்வரும் படிமுறையைக் கையாள வேண்டும்.

  • இல் அசைவூட்ட முறையினுள் –> (Animation) பிரிவுக்குள் உள்ளவற்றைப் பார்த்து வித்தியாசங்களை அவதானிக்க.
  • Animation (Timing) –> Start அதிலே உள்ள மாற்றீடுகளை தேர்ந்தெடுத்து சுட் டியை சொடக்குவதன் மூலமாகவா? அல்லது சுயமாகவா? இயங்கச் செய்வது எனத் தீர்மானிக்க.
  • Animation முறையினுள் (Timing) – Duration / Delay → Start (LDTDP 6500T தேர்ந்தெடுத்து அசைவூட்டங்கள் சுயமாக இயக்கும் நேரத்தினை தேவையான முறையில் கூட்டிக் குறைக்க முடியும்).
  • Animation முறையினுள் (Advanced Animation) – Animation Pane – சதுரத்தினை பெற்றுக் கொள்க. அதன்மூலம் உட்புகுத்தப்பட்ட அசைவூட்டங்களை அழி த்தல், மாற்றுதல், அழகுபடுத்தல் மற்றும் பொத்தான் மூலம் இயக்குதல் போன்ற விட யங்களைச் செய்யலாம்.

ஒலியினை உட்புகுத்தல் (Inserting Sounds)

இலத்திரனியல் நிகழ்த்துகையில் பின்வரும் படிமுறைகளைக் கையாள்வதன் மூலம் ஒலியினை உட்புகுத்திக் கொள்ள முடியும்.

Insert –> Media –> Audio (இங்கு Media from file, Clip Art Audio மற்றும் Record Audio என மூன்று மாற்றீடுகள் காணப்படுகின்றன). Media from file இலிருந்து கணினியினுள் உள்ள அல்லது வெளிவாரியாகக் கிடைக்கப்பெறும் Media file இனை இதன்மூலம் நிகழ்த்து கைக்கு உட்புகுத்த முடியும். Audio Micro phone மூலம் கணினியை தொடர்புபடுத்தி பெற்றுக் கொண்ட ஒலியினை கணினியின் நினைவகத் தில் (Memory) உட்புகுத்த முடியும். உரிய Record ஐ Audio மாற்றீடாக்கி பெறப்படும் சந்தர்ப்பத்தில் கபிலநிறப் புள்ளியுடன் கூடிய பொத்தானைச் சொடக்குவதன் மூலம் ஒலிப்பதிவு செய்து கொள்ளலாம்.

ஒளியுருவினை உட்புகுத்தல் (Inserting Video)

  • Insert முறையினுள் Media – Video (இங்கு Video from File, Video from Website மற்றும் Clip Art Video என மூன்று மாற்றீடுகள் காணப்படுகின்றன.)
  • Video from File.. –> (கணினியினுள் உள்ள அல்லது வெளிவாரியாக கிடைக்கப்பெறும் ஒளியுருக் காட்சி (Video File) ஒன்றினை இதன் மூலம் நிகழ்த்துகையினுள் உட்புகுத்திக் கொள்க.)
  • Video from Website (இணைய தளத்திலுள்ள ஒளியுருக் காட்சி ஒன்றி னை நிகழ்த்துகையினுள் உட்புகுத்திக் கொள்க.)
  • Clip Art Video (முன் ஆயத்த முறை யில் தயாரிக்கப்பட்டுள்ள வீடியோ ஒன் றினை நிகழ்த்துகையினுள் உட்புகுத்திக் கொள்க.)

(Custom Animation) செய்க. * இலத்திரனியல் நிகழ்த்துகையினை அச்சிடல் (Printing of Presentation)

File –> Print இதன் மூலம் இலத்திரனியல் நிகழ்த்துகையினை அச்சிட முடியும். அச்சிடுவதற்கு என கிடைக்கப்பெறும் சதுரத்தின் மாற்றீடு மூலம் பின்வரும் செயற்பாடுகளைச் செய்து அச்சிட முடியும்.

  • Printer :- (கணினியுடன் இணைக்கப் பட்டுள்ள அச்சுப் பொறியை (Printer) தெரிவு செய்க.)
  • Settings :- (சகல படவில்லைகளையும் அச்சிடுவதா? அல்லது குறிப்பிட்ட இலக் கங்களையுடைய படவில்லைகளை அல் லது சில படவில்லைகளை மட்டும் அச்சி டுவதா? என தீர்மானித்து, அவற்றை அச்சி டுவதற்கு அதில் உள்ள மாற்றீடுகளை பயன்படுத்துக). தேவைக்கேற்பவும் கடதாசியின் அளவுக் கேற்பவும் பெரிதாக்கி அல்லது சிறிதாக்கி அச்சிட முடியும்.