Microsoft-Office-Word

சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருள் பற்றிய அறிமுகம்

பேனை மற்றும் பென்சிலை உபயோகித்து ஆவணங்களைத் தயாரித்தபோது முகங்கொடுத்த பிரச்சினைகளுக்கு மாற்றீடாக தட்டச்சுப் பொறி பயன்படுத்தப்பட்டது…

அறிமுகம்

பாடசாலையின் நடப்புவருடக் கலைவிழாவை மிக விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென அதிபர் உமக்கு அறிவித்துள்ளார். நீங்கள், விழாவின் ஏற்பாட் டுக்குழு அங்கத்தவராக நியமிக்கப்பட்டமை மிக மகிழ்ச்சியானதாக இருந்திருக்கும். கலைவிழாவிற்குரிய ஆவணங்களைத் தயாரிக்கும் பொறுப்பும் உமது தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற் கென செய்யவேண்டிய விடயங்கள் வருமாறு:

  • அழைப்பிதழ் தயாரித்தல் . 
  • பெற்றோரை அறிவுறுத்துவதற்கான கடிதம் தயாரித்தல் 
  • சான்றிதழ் தயாரித்தல்

அவை மிகவும் கவர்ச்சிகரமாகத் தயாரிக்கப்பட்டு அச்சிடப்படவேண்டும். இவை தொடர்பான சுருக்கக் குறிப்பை எடுத்துக்கொண்ட நீங்கள் இவற்றை எவ்வாறு சிறப்பாக தயாரிக்கலாமெனக் கேட்டறிந்தீர்கள்.

“இந்த அழைப்பிதழைக் கையெழுத்தில் எழுதுவோம்.’ இது ஒருவரின் ஆலோசனையாகும்.

“நல்ல யோசனை, ஆனால் எழுத்துக்கள் ஒரே அளவில் ஒரே வடிவில் அமையமாட்டாதே, அதனால் நாம் வாசிகசாலையிலுள்ள தட்டச்சு இயந்திரத்தைப் பயன்படுத்துவோம்,” இன்னொரு ஆலோசனை.

“அழகிய எழுத்து வடிவங்களை பெறவும் வேண்டும். படங்கள் இருந்தால் மேலும் அழகாக இருக்கும். சுற்றிவர விளிம்புகளை (Border) அமைத்தால் மேலும் சிறப்பாக இருக்கும். தட்டச்சினால் இவற்றை செய்ய முடியாதே” இதற்கெனப் பொருத்தமான வழிமுறைகளை கையாளவும் வேண்டியுள்ளது.

இவ்வாறு நாளாந்த வாழ்வில் பல்வேறு கருமங்களின்போது பயன் படுத்தப்படும் ஆவணங்கள் பல்வேறு முறைகளில் தயாரிக்கப்படுவதே சொல் முறைவழிப்படுத்தல் எனப்படும். பேனை மற்றும் பென்சிலை உபயோகித்து ஆவணங்களைத் தயாரித்தபோது முகங்கொடுத்த பிரச்சினைகளுக்கு மாற்றீடாக தட்டச்சுப் பொறி பயன்படுத்தப்பட்டது. கைகளால் தயாரிக்கப்பட்ட ஆவணங்களை விட இது தெளிவாக இருந்தபோதிலும் ஆவணங்களை அழகுபடுத்தல், அவற்றை சேமித்தல், போதியளவு அச்செடுத்தல் போன்ற பல விடயங்களை தட்டச்சு மூலம் செய்து கொள்ளமுடியாது.

தொழினுட்ப விருத்தியின் காரணமாகக் கிடைக்கப்பெற்றுள்ள கணினி இதற்கு மிகப் பொருத்தமானதோர் உபகரணம் என்பதை நாம் அறிந்துள்ளோம். இதன்மூலம் சொல் முறைவழிப்படுத்தலைச் செய்வதற்குப் பொருத்தமான மென்பொருளைப் பயன்படுத்த முடியும். இந்த மென்பொருளிலுள்ள வசதிகள் வருமாறு:

ஆவணங்களைத் தயாரித்தலும் வடிவமைத்தலும் (Creating and Formating) படங்கள், முன் ஆயத்தப் படங்கள் (Clip Art) போன்றவற்றை உட்புகுத்தல். (Insert Objects) சேமித்தலும் மீள திறத்தலும் (Saving and Retrieving) எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் நிவர்த்தி செய்தல். (Spelling and Grammar checking) சொற்களைத் தேடுவதும் அவற்றுக்கு மாற்றுச் சொற்களை இடுவதும் (Find and Replace) அஞ்சல் இணைப்பை (Mail Merge) அமைத்தல் அச்சிட முன்னர் அதன் முன்காட்சிகளைப் பார்வையிடவும் ஆவணங்களை அச்சி டவும் முடிதல் (Print Preview and Printing)

சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருள்கள்

பிரபலமான சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருள்கள் பல சந்தையில் காணப்பட்ட போதிலும் இவற்றில் சில மென்பொருள்களை பணம் கொடுத்தே வாங்க வேண்டியுள்ளது. எனினும், உங்களது வசதி கருதி இலவச மென்பொருள்களை (Free and open source software – FOSS) இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளமுடியும்.

சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருள்கள் சில கீழே காட்டப்பட்டுள்ளன. இணையத் தளத்தினைப் பயன்படுத்தி இம்மென்பொருள்கள் தொடர்பான மேலதிக விவரங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வசதிகள் உள்ளன.

மென்பொருளின் பெயர் உற்பத்தி நிறுவனம்
AbiWordSource Gear Corporation
FrameMakerAdobe Systems Incorporated
iworkApple
Kingsoft OfficeKingsoft 
LibreOffice WriterThe Document Foundation (Open Source)
LyXThe LyX Project
Microsoft Office WordMicrosoft Cororation
Open Office WriterApache Software Foundation (Open Source Software)
Word PerfectCorel

உமது கணினியில் சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருள்கள் எவையும் இல்லாதபோதும் கூட இணையத்தினைப் பயன்படுத்தி உமது ஆவணங்களைத் தயார் படுத்திக்கொள்ள முடியும். மேலும், Cloud Computing இனைப் பயன்படுத்துவதன் மூலமும் உமது ஆவணங்களைத் தயாரிக்கவும் முடியும். இதன்மூலம் பல்வேறு நன் மைகள் கிடைக்கப்பெறுகின்றன. அவையாவன:

  • உமது கணினியினுள் சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருளினை நிறுவ வேண்டிய அவசியமில்லை .
  • இதற்கென கணினியின் வன்வட்டில் (Hard disk) மேலதிக இடத்தினை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை
  • உமது ஆவணத்தினை சேமிக்கவென இணையத்தில் உமக்கென ஓர் இடம் ஒதுக்கப்பட்டிருத்தல்
  • இணையதள வசதியுள்ள எந்த ஒரு கணினியின் மூலமும் உமது ஆவணத்தினை மீளத் திறக்கவும் அதனை மீள ஒழுங்கமைக்கவும் முடியும்
    • உதாரணம் – Google Docs, Windows 365 Word, Microsoft OneDrive Word

இதற்கு மேலதிகமாகத் தற்காலத்தில் உயர் தொழினுட்பத்தினைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ள சூட்டிகைத் தொலைபேசி (Smartphone) மற்றும் வரைவு இலக்கமாக்கிக் கணினிகள் (Tablet PCs) போன்றன சொல் முறைவழிப்படுத்தலுக்காகப் பயன்படுத்தப்படுவதோடு அதற்கென விசேடமான மென்பொருளொன்றும் நிறுவப் பட்டுள்ளது. Documents To Go, Google Docs, Kingsoft Office, Polaris Office போன்றன அவற்றுட் சிலவாகும்.

உமது தேவைக்கேற்ப ஆவணங்களைத் தயாரிப்பதற்கு கணினியுடன் தொடர்பான சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளை எவ்வாறு பயன்படுத் தலாம் என அவதானிப்போம்.

இன்று அதிகமாகப் பாவனையிலுள்ள சொல் முறைவழிப்படுத்தல் மென் பொருள்கள் இரண்டினைப் பயன்படுத்தும் முறை பற்றி இந்த அத்தியாயத்தில் விளக் கப்பட்டுள்ளது. எனினும், வேறு பல மென்பொருள்கள், உபகரணங்கள் பற்றியும் இங்கு மேலோட்டமாகக் கலந்துரையாடப்படும்.