Microsoft-Office-Access

இலத்திரனியல், கைமுறைத் தரவுத்தளங்கள் மற்றும் தொடர்புநிலைத் தரவுத்தளம்

இலத்திரனியல் தரவுத்தளங்களை உருவாக்கக் குறைந்த கொள்ளளவைக் கொண்ட சேமிப்பகம் தேவைப்படுவது விசேடமானதாகும். பின்வரும் அட்ட வணையானது கைமுறை, இலத்திரனியல் தரவுத்தளங்களுக்கிடையேயான வேறு பாடுகளைக் காட்டுகிறது.

இலத்திரனியல் தரவுத்தளங்கள் மற்றும் கைமுறைத் தரவுத்தளங்களுக்கு இடையேயான ஒப்பீடு

  • கைமுறைத் தரவுத்தளம்
  1. வினைத்திறன் குறைவு
  2. திருத்தம் குறைவு
  3. நம்பகத்தன்மை குறைவு
  4. தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல் கடினமாகும்
  5. உள்ளீடு செய்யப்பட்ட வரிசையிலே காட்சிப்படுத்தப்படும்
  6. தேவையற்ற தரவுகளை நீக்குவது கடினமாகும்
  7. தரவுகளை இற்றைப்படுத்துவது (Update) கடினமாகும்
  8. தரவுகளைச் சேமிக்க அதிக இடம் தேவைப்படும்
  9. அதிக மனிதவளம் தேவைப்படும்
  • இலத்திரனியல் தரவுத்தளம்
  1. வினைத்திறன் அதிகம்
  2. திருத்தம் அதிகம்
  3. நம்பகத்தன்மை அதிகம்
  4. தரவுகளை பகுப்பாய்வு செய்தல் இலகுவாகும்
  5. உள்ளீடு செய்யப்பட்ட வரிசை மாற்றியமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும்.
  6. தேவையற்ற தரவுகளை நீக்குவது இலகுவாகும்
  7. தரவுகளை இற்றைப்படுத்துவது (Update) இலகுவாகும்
  8. தரவுகளைச் சேமிக்க குறைந்த இடம் போதுமானதாகும்
  9. குறைந்த மனிதவளம் போதுமானதாகும்

தொடர்புநிலைத் தரவுத்தளத்தின் அறிமுகம்

குறித்த ஓர் இலக்குபொருள் அல்லது நபர் சம்பந்தமான பல்வேறுபட்ட புலங்களின் கூட்டம் பதிவாகக் (Record) கருதப்படும். பதிவுகளின் கூட்டம் அட்ட வணையாகக் கருதப்படும். ஒன்றுடனொன்று தொடர்புடைய அட்டவணைகளின் கூட்டம் தொடர்புநிலைத் தரவுத்தளமாகக் கருதப்படும்.

தொடர்புநிலைத் தரவுத் தளமொன்றை உருவாக்கும் படிமுறையை தற்போது அவதா னிப்போம். (அட்டவணை 9.5) புலங்களின் சேர்மானம் பதிவாகக் கருதப்படுவதுடன், பல பதிவுகளின் சேர்மானம் அட்டவணையாகக் கருதப்படும். பல அட்டவணைகளைக் கொண்டதே தொடர்புநிலைத் தரவுத் தளமாகும்.

உதாரணம்

பாடசாலையிலுள்ள ஒவ்வோர் மாணவருக்கும் அவரவர்மாணவர்பதிவுப்புத்தகம் மிக முக்கியமான அறிக்கையாகும். இதில் மாணவர்களது தனிப்பட்ட விடயங்கள், ஒவ்வொரு வகுப்பிலும் மூன்று தவணைப் பரீட்சையில் பெற்ற பாடப்புள்ளிகள், ஒவ்வொரு தவணையிலும் அவர்களது நிலை போன்ற விவரங்கள் காணப்படும்.

மேலுள்ள அட்டவணையானது ஒவ்வோர் மாணவரதும் தெரிவுசெய்யப்பட்ட விவரங்களைக் காட்சிப்படுத்துகிறது. இதில் கவிது பிரபாஷ்வர், மீனாதேவி ராமநாதன் மற்றும் மொஹமட் மரிக்கார் எனும் தரவுகள் மூலம் ஒரு புலம் உருவாக்கப்படுகிறது. இவ்வாறான புலங்களைப் பெயரிட ‘புலப்பெயர்’ பயன்படுத்தப்படும்.

ஒவ்வோர் புலப்பெயருக்கும் பொருத்தமான தரவுகளை வழங்குவதன் மூலம் அட்டவணையொன்றை உருவாக்கலாம்.

அட்டவணையொன்றின் நிரல்கள் மூலம் புலங்கள் காட்சிப்படுத்தப்படும். மேலுள்ள அட்டவணையில் ஐந்து புலங்கள் காணப்படுகின்றன. அனுமதி இலக்கம், மாணவர் பெயர், பிறந்த திகதி, பால் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியனவே அவையாகும். புலங்கள் அனைத்தினதும் சேர்மானம் மூலம் பதிவுகள் உருவாக்கப் படும். இதற்கமைய மேலுள்ள அட்டவணையில் மூன்று பதிவுகள் காணப்படுகின்றன.

தரவுகளைக் கொண்ட அட்டவணையொன்றின் ஒரு பகுதி கீழே காட்டப்பட்டுள்ளது.

இங்கு மாணவர் பெயர், பிறந்த திகதி, பால் மற்றும் தொலைபேசி இலக்கம் போன்ற தரவுகள் மீண்டும் பதிவுசெய்யப்பட வாய்ப்புண்டு. ஆனால், அனுமதி இலக்கம் எனும் புலத்தில் பதிவுசெய்யப்பட்ட தரவானது மீண்டும் பதிவுசெய்யப்பட்ட முடியாது. எனவே, அனுமதி இலக்கத்தின் மூலம் பதிவு ஒன்றைத் தனித்துவமாக அடையாளப்படுத்த முடியும்.

கீழுள்ள தொடர்நிலை அட்டவணைகள் மூலம் அஞ்சனா செல்வராஜா பெற்ற புத்தகங்களின் விவரம் காட்சிப்படுத்தப்படுகிறது.