Microsoft-Office-Access

Microsoft Access இல் பயன்படுத்தப்படும் key வகைகள்

முதன்நிலைச் சாவி முதன்மைச் சாவி (Trimary Key)

அட்டவணையிலே பதிவு ஒன்றைத் தனித்துவமாக (Unique) அடையாளப் படுத்தப் பயன்படுத்தப்படுகின்ற புலம் (அல்லது புல சேர்மானம்) முதல்நிலைச் சாவியாகும் (முதன்மைச் சாவி / Primary Key) கருதப்படுகிறது.

  • உதாரணம் – ஆள் அடையாள அட்டை இலக்கம், பாடசாலை

குறிப்பு:- நிலைச் சாவியொன்றின் விசேட அம்சங்கள் .

  • சூனியமாகக் (பூச்சியமல்லாத) காணப்பட முடியாது (தரவுகள் காணப்படுவது அத்தியாவசியமாகும்)
  • தரவுகள் மீள் பதிவு நடைபெறும். (ஒரே தரவாளது மீளப் பதிவு செய்யப்படமாட்டாது.)

உதாரணமாகப் பின்வரும் தரவுகளைக் கொண்ட அட்டவணையை அவதானிக்க,

இவ் அட்டவணையில்

ஒவ்வொரு புத்தகத்தினதும் பதிவு இலக்கம் சமனாகக் காணப்படுவதில்லை (தனித்துவமானது)

  • கணினி மொழி கற்கை எனும் புத்தகத்தை கரனியல் பஸ்தாயா, மொஹமட் நியாஸ் எனும் ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.
  • ராஜ் சுதாகரன் எனும் ஆசிரியரால் தமிழ்மொழியைக் கற்போம். சிங்கள தமிழ் அகராதி போன்ற புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன.
  • கட்டுரை எழுதுதல், தமிழ் மொழியைக் கற்போம் ஆகிய இரண்டு புத்தகங்களினதும் விலைகள் சமனாக உள்ளன.
  • கல்வி உளவியல் மற்றும் சிங்கள தமிழ் அகராதி போன்ற புத்தகங்களின் எண்ணிக்கை 6 ஆக காணப்படுகிறது,

இக்காரணிகளின் அடிப்படையிலே புத்தகத்தின் பதிவு இலக்கமானது தனித்துவமாகக் காணப்படுவதால் முதல்நிலைச் சாவியாகத் தெரிவுசெய்யப்பட்ட மிகப்பொருத்தமான புலமாகும்.

குறிப்பு : அட்டவணையொன்றிவே முதல்திலை சாளியை அடையாளப்படுத்த அதற்கு அடிக்கோடு இடப்படும்.

இணைந்த / சேர்மானச் சாவி (Composite Primary Key)

அட்டவணையொன்றிலே பதிவுவொன்றை தனித்துவமாக அடையாளப் படுத்திக்கொள்ள பயன்படுத்தப்படுகின்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட புலங்களின் சேர்மானமே “Composite Primary Key” ஆகக் கருதப்படும். கீழுள்ள அட்டவணை, பாடசாலையொன்றின் விளையாட்டுத்துறைத் தலைவர், உபதலைவர் சம்பந்தமான விவரங்களைக் காட்சிப்படுத்துகிறது.

இவ் அட்டவணையிலே ஒவ்வொரு நிரலிலும் சில தரவுகள் மீளப் பதியப்பட்டி ருப்பதை காணலாம். இதனால் பதிவொன்றைத் தனித்துவமாக அடையாளப்படுத்த ஒரு தனிப் புலத்தைப் (நிரலை) பயன்படுத்தமுடியாது. அத்துடன் குறித்த ஓர் ஆண்டில் ஒரு விளையாட்டுக்காக நிரந்தரத் தலைவர், உபதலைவர் காணப்படல் வேண்டும். இதனால் ஆண்டு, விளையாட்டு போன்ற இரு புலங்களின் சேர்மானத்தை முதல்நிலைச் சாவியாகக் கருதமுடிவதுடன், இச்சேர்மானத்தின் மூலம் உருவாக்கப்படுகின்ற Composite key ஆனது முதல்நிலைச் சாவிக்குப் பொருத்தமாகும். சேர்மான முதல்நிலைச் சாவியை அடையாளப்படுத்துவதற்காக இப்புலங்களுக்கு தனித்தனியே அடிக்கோடு இடப்பட்டிருக்கும்.

ஆண்டுவிளையாட்டுதலைவர்உபதலைவர்
  • சேர்மான முதல்நிலை சாவியை இனங்காணல்

மேலுள்ள அட்டவணையிலே முதல்நிலைச் சாவி = ஆண்டு + விளையாட்டு

அந்நியச் சாவி (Foreign Key)

ஒரு அட்டவணையிலுள்ள புலம் (அல்லது புலச்சேர்மானம்) மூலம் வேறோர் அட்டவணையிலுள்ள பதிவொன்று தனித்துவமாக அடையாளப்படுத்தப்படுமாயின், அப்புலம் (அல்லது புலச்சேர்மானம்) இவ்வட்டணையிலுள்ள அந்நியச் சாவியாகக் கருதப்படும். அந்நியச்சாவி மூலம் இரண்டு அட்டவணைகளுக்கிடையே தொடர்பு உருவாக்கப்படும்.

குறிப்பு:-

அந்நியச் சாவியின் விசேட அம்சங்கள்

  • இரண்டு அட்டவணைகளுக்கிடையே தொடர்பை உருவாக்குதல்
  • தொடர்புபட்ட அட்டவணைகளிலே முதல்நிலைச் சாவியைக் கொண்ட புலத்துடன் தொடர்புடைய தரவுகள் மாத்திரமே காணப்பட முடியும்.
  • ஓர் அட்டவணையிலுள்ள அந்நியச் சாவியானது இன்னோர் அட்ட வணையிலே முதல்நிலை சாவியாகக் காணப்படும்.

அட்டவணையொன்றிலே தரவு மீள்பதிவு நடைபெறுவதால் பின்வரும் பிரதி கூலங்கள் ஏற்படுகின்றன.

  1. பதிவுகளின் தனித்துவத்தைப் பேண முதல்நிலைச் சாவியாக புலம் ஒன்றை தெரிவு செய்ய முடியாமை
  2. தரவுகளைத் திருத்தமாகப் பகுப்பாய்வுசெய்ய முடியாமை மேலுள்ள அட்டவணையிலே 60 புள்ளிகளுக்கு அதிகமாகப் பெற்ற மாணவர்கள் 5 பேர் எனக் காட்டப்படினும் குறித்த வகுப்பிலே 3 மாணவர்களே காணப்படுகின்றனர். எனவே, தரவுகளை திருத்தமாகப் பகுப்பாய்வுசெய்ய முடியாது.
  3. தரவுத் தளத்தின் வினைத்திறன் குறைவடைதல் மேலுள்ள அட்டவணையிலே பல ஆண்டுகளுக்கான தவணைகளின் புள்ளி களை உள்ளீடு செய்யும்போது அனுமதி இலக்கம், மாணவர் பெயர், பிறந்த திகதி போன்ற புலங்களின் தரவுகளைப் பதிவுசெய்வதற்கு அதிககாலம் தேவைப் படுவதால் வினைத்திறன் குறைவடையும்.
  4. தரவுகள் திருத்தமற்றதாகப் பெறப்படுவதற்கு அதிக வாய்ப்பு ஏற்படல் மேலுள்ள அட்டவணையிலே ஒரே தரவானது மீள பதிவுசெய்யப்படுவதால் திருத்தம் குறைவடைய வாய்ப்புண்டு. உதாரணமாக மாணவர் பெயர் மொஹமட் மரிக்கார் என ஓர் இடத்திலும் மொஹமட் மலக்கார் என இன்னோர் இடத்திலும் பதிவுசெய்யப்பட வாய்ப்புண்டு. இதனால் திருத்தம் குறைவடையும்.
  5. தரவுகளை உள்ளீடு செய்வது சிரமமாதல் குறித்த மாணவர் பெற்ற புள்ளியை உள்ளீடு செய்ய வேண்டுமெனில், அவரின் பெயர், பிறந்த திகதி போன்ற தரவகளை மீள உள்ளீடு செய்ய வேண்டும்.
  6. தரவுகளை நீக்கும் போது தவறுகள் ஏற்படல் குறித்த மாணவர் சம்பந்தமான பல பதிவுகள் காணப்படுவதால் அவற்றை நீக்கும்போது தவறுகள் ஏற்படலாம்.
  7. தரவுகளை இற்றைப்படுத்த சிரமமாதல் குறித்த மாணவர் சம்பந்தமான பல பதிவுகள் காணப்படுவதால் இற்றைப்படுத்தும் போது ஒவ்வோர் பதிவையும் கருத்தில் கொண்டு இற்றைப்படுத்த வேண்டும்.

மேலுள்ள பிரச்சினைகள் ஏற்பட ஓர் அட்வணையிலே எல்லாத் தரவுகளும் காணப்படுவதே காரணமாகும். இதற்காக இவ் அட்டவணையை இன்னும் பல அட்டவணைகளாகப் பிரிப்பதே சிறந்த தீர்வாகும்.

இந்நிலையில் தரவு மீள்பதிவு நடைபெறக் காரணமான புலத்தை நீக்குமுகமாக இவ்அட்டவணையானது இரு அட்டவணைகளாகப் பிரிக்கப்படும். (மாணவர் அட்டவணை, புள்ளி அட்டவணை).

மாணவர் அட்டவணையிலே அனுமதி இலக்கம், மாணவர் பெயர், பிறந்த திகதி போன்ற புலங்கள் காணப்படும்.

இம்மாணவர் அட்டவணையிலே மாணவர் பெயர், பிறந்த திகதி போன்ற தரவுகள் மீளப்பதிவுசெய்யப்பட வாய்ப்புண்டு. ஆனால், அனுமதி இலக்கம் மீளப்பதிவுசெய்யப்பட முடியாது. எனவே, பதிவுகளை தனித்துவமாக அடையாளப்படுத்த முதல்நிலைச் சாவியாக அனுமதி இலக்கம் பொருத்தமான புலமாகும்.