Microsoft-Office-Word

புதிய ஆவணமொன்றைத் தயாரிக்கும்போது கருத்திற் கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்

  • கட்டம் 1

புதிய பக்கம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளல், சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளினைத் திறக்கும்போது இயல்பாகவே புதிய பக்கமும் திறக்கப்படுகின்றது. மேலதிக பக்கங்கள் தேவைப்படின் அவற்றை நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

Microsoft Word இல் File –New (Ctrl+N) –Blank Document – Create ஐச் சொடக்குக.

  • கட்டம் 2

கோப்பினைச் சேமித்தல் (Save) நீங்கள் தயாரித்த கோப்புக்கு பொருத்தமான பெயரை வழங்கி பொருத்தமான Microsoft Wordஇடத்தில் சேமித்தல் முக்கியமாகும். இது கோப்பினை மீளப் பெற்றுக்கொள்வதற்கும் உதவும்.

File-Save (Ctrl+S) ஐ தெரிவு செய்க. – சேமிப்பதற்குப் பொருத்தமான இடத்தினைத் (Saving Location) Save in என்ற இடத்தில் தெரிவுசெய்க. கோப்புக்குப் பொருத்தமான பெயர் ஒன்றினை File name இற்கு எதிரே தட்டச்சு செய்க. -Save இனைச் சொடக்குக.

 

  • கட்டம் 3

சேமித்த கோப்புக்கு வேறு ஒரு பெயரை கொடுத்து கணினியினுள் சேமித்தல். உம்மால் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆவணத்தினை (Document) சேமித்த பின்னர் அது கோப்பு (File) என அழைக்கப் |படும். இதனை வேறு ஒரு பெயரில் |அல்லது வேறு ஒரு இடத்தில் சேமிக்க முடியும். அப்போது தற்சமயம் பயன்படுத்தும் பெயரில் ஒரு கோப்பிலும் புதிய பெயரில் இன்னொரு கோப்பிலுமாக ஒரே ஆவணத்தை இரண்டு கோப்புகளாக கிடைக்கும். கோப்பினை பெயர் நீட்சி (File Extension) ஒன்றுடன் சே மிக்கப்படுவதோடு அதனை தேடு வது இலகுவாகும். கோப்பின் நீட் சிகள் (File Extension) சில

  • MS Word 2007/ 2010 – .docx
  • MS Word 97-2003 – .doc
  • LibreOffice Writer – . .odt

இதற்கென File-Save as ஐ தெரிவு செய்க. – சேமிப்பதற்கு பொருத்தமான ஒர் இடத்தினை (Saving Location) Save in இடத்திலிருந்து தெரிவுசெய்க. – கோப்புக்குப் பொருத்தமான பெயர் ஒன்றினை File name இற்கு எதிரே தட்டச்சுச் செய்க. – Save இனைச் சொடக்குக.

  • கட்டம் 4

கோப்பினை மூடிவிடுதல் நீர் தயாரித்து சேமித்த ஆவணத் தினை மீளப் பயன்படுத்தும் வரை மூடிவைப்பதே புத்திசாதுரியமான செயலாகும். தேவையின்றி அதனைத் திறந்து வைப்பது கணினியின் ஏனைய செயற்பாடுகளுக்குத் தடையாக அமை யும். இதற்கென File – Close ஐ தெரிவுசெய்க.

  • கட்டம் 5

கோப்பினை மீளத் திறத்தல் உம்மால் கணினியினுள் சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்பினை மீளத் திறக்க வேண்டி ஏற்படும்

File-Open(Ctrl+O) ஐ தெரிவுசெய்க. • Open எனும் சொல்லாடற் பெட்டி யிள்ள Lookin எனும் இடத்தில் சொடக்கி சேமித்த கோப்பினைத் தெரிவுசெய்க. • உரிய பிரிவில் கோப்பினைத் தெரிவுசெய்க. • Open என்பதைச் சொடக் குக.

  • கட்டம் 6

கோப்புக்கு கடவுச்சொல் (Password) ஒன்றினை வழங்கிச் சேமித்தல் உமது கோப்பினை பாதுகாப்பாக சேமிக்க வேண்டுமெனின் கடவுச் சொல் (Password) ஒன்றினை வழங்கி பாதுகாப்பதே பொருத்தமானது. இவ்வாறு செய்வதனால் உமது கோப்பினை வேறு எவரும் திறந்து பயன்படுத்த முடியாது.

Microsoft Word இல் • File-Save இனைத் தெரிவுசெய்க. • சேமிப்பதற்குப் பொருத்தமான இடத்தினை (Saving Location) Save in இலிருந்து தெரிவுசெய்க. • கோப்புக்குப் பொருத்தமான பெய ரினை File Name இற்கு எதிரே தட்டச்சுச் செய்க. • Tools ஐத் தெரிவுசெய்க. • General Option ஐத் தெரிவுசெய்க. • Password to Open சதுரத்தினுள் உமது கடவுச்சொல்லினை (Password) தட் டச்சு செய்து OK செய்க. • அந்த கடவுச்சொல்லையே மீண்டும் (Re-enter Password to Open) சதுரத்தில் தட்டச்சு செய்து OK செய்க. • Save ஐ சொடக்குக.