Microsoft-Office-Word

சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருள் ஆவணத்தினை அலங்கரித்தல் (Decorating Document)

சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளில் நீர்தயாரித்த ஆவணம் அல்லது கடிதத்தினை தெளிவாகவும் அலங்காரத்துடனும் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு அம்சங்களை உட்புகுத்த முடியும்.

  1. வடிவங்கள் (Shapes / Objects)
  2. படங்கள் (Pictures / Images / Clip Art)
  3. குறியீடுகள் (Symbols)
  4. அட்டவணைகள் (Tables)
  5. தலைப்பும் அடிக்குறிப்பும் (Header and Footer)
  6. பக்க இலக்கங்கள் (Page Numbers)
  7. நிரல்க ள் (Columns)8. சொற்கலை (Word Art/ Font work)

நீங்கள் தயாரித்த ஆவணங்களை மிகத் தெளிவாகவும் அலங்காரமாகவும் பெற்றுக் கொள்வதற்குப் படிமங்களையும் (Images) வடிவங்களையும் (Shapes) உள்ளிடலாம். இதற்கென முதலில் படிமங்கள் (Images) அல்லது வடிவங்கள் (Shapes) தேவைப்படும் இடத்தில் நிலைகாட்டியை (Cursor) வைத்து அவற்றை உள்ளிடுக.

  • Insert ஐயும் அதன் பட்டியையும் பயன்படுத்தி வடிவமைப்பதாயின் Insert –> Shapes ஐ தெரிவுசெய்க.
  • உரிய வடிவத்தின் மீது சொடக்கி அதனை ஏற்கனவே தேர்ந்தெடுத் துள்ள இடத்துக்கு இழுத்து வரவும்.
  • ஒரு படிமத்தினை இடுவதற்கு Insert இல் இருந்து Picture / Clip Art ஐ
  • தெரிவுசெய்க.நீங்கள் விரும்பும் படிமத்தினை திறந்து கொள்க.

வடிவம் அல்லது படிமங்களை ஒழுங்கமைத்தல்

நீர் உமது ஆவணத்தினுள் உட்புகுத்திய படம் அல்லது வடிவத்தினை உமது தேவைக்கேற்ப வடிவமைத்துக் கொள்ளமுடியும். இங்கு அதன் அளவினையும் நிறத்தினையும் விளிம்புகளையும் (Border) மற்றும் இடத்தினையும் மாற்றிக் கொள்ள முடியும். படத்தில் அல்லது வடிவத்தில் மாற்றங்களைச் செய்ய முன்னர் அதன் மீது சுட்டியை வைத்துச் சொடக்கி தெரிதல் வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுத்ததன் பின்னர் தென்படும் படம் அல்லது வடிவத்தினை வடிவமைப்பதற்குப் பொருத் தமான கருவிப் பட்டையினைப் பயன்படுத்திக் கொள்க.

குறியீடுகள் (Symbols)

ஆவணங்களை தயாரிக்கும்போது பல்வேறு குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டி ஏற்படும். எனினும், நாம் பயன்படுத்தும் விசைப்பலகையில் (Keyboard) குறிப்பிட்ட அளவு குறியீடுகளே காணப்படுகின்றன. எனவே, மேலதிக குறியீ டுகளைப் பெற்றுக்கொள்வதற்கு பின்வரும் படிமுறைகளைக் கையாள வேண்டும்.

  • Microsoft Word இல் Insert- Symbol மூலம் திறக்கப்படும் சட்டகத்தில் உள்ள குறியீடுகளைத் தேர்ந் தெடுத்து Insert மீது சொடக்குவதன் மூலம் ஆவணத்தில் உட்புகுத்த முடியும்.

தலைப்பு, அடி (Header and Footer) மற்றும் பக்க எண்க ள் (Page Numbers)

ஆவணங்கள் மற்றும் சஞ்சிகைகளை உருவாக்கும்போது தலைப்பு, அடி போன்றனவுடன் பக்க எண்கள் இடப்படுவதும் சிறந்ததாகும். இதற்காக Insert Header and Footer மற்றும் Insert Page Number இனை பயன்படுத்தி ஆவணத்திற்கு பொருத்தமானவாறு தலைப்பு, அடி மற்றும் பக்க எண்களையும் இடுக.

நிரல் (Column)

பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளை உருவாக்கும் போது இவ்வசதியானது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

நிரலானது குறித்த வரியை / பந்தியை தட்டச்சிட முன்னர் அல்லது தட்டச் சிட்ட பின்னர் தேவைக்கேற்ப இடப்பட முடியும். இதற்காக முதலில் தட்டச்சிட்ட வரியை / பந்தியை தெரிவு செய்தல் வேண்டும்.

  • Page Layout  –> Columns –> ஆவணத்திற்கு பொருத்தமானவாறு நிரல் எண்ணிக்கையைத் தெரிவு செய்க

அட்டவணைகள் (Tables)

ஆவணங்களைத் தயாரிக்கும்போது சில தரவுகளை அட்டவணைப்படுத்த நேரிடும். அதற்கென அட்டவணையொன்றினைப் பொருத்தமாகத் தயாரித்துக் கொள்ள வேண்டும். சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளில் இதற்கான வச திகள் காணப்படுகின்றன.

  1. அட்டவணைக்கு அவசியப்படும் நிரைகள் (Rows) மற்றும் நிரல்கள் (Columns) என்பவற்றை உட்புகுத்தல் அல்லது வரைதல்
  2. அவசியமற்ற வரிகள் மற்றும் நிரல்களை நீக்குதல்
  3. மேலதிக வரிகள் மற்றும் நிரல்களை உட்புகுத்தல்
  4. அட்டவணையிலுள்ள கலங்களினை இணைத்தல். (Merge Cell)
  5. அட்டவணையிலுள்ள ஒரு கலத்தினை பல பாகங்களாக பிரித்தல் (Split Cell)
  6. அட்டவணைக்கு நிறம் கொடுத்தல்
  7. சொற்களின் திசையினை மாற்றுதல் (Changing Text Direction) போன்ற பல வசதிகள் காணப்படுகின்றன.

அட்டவணை அட்டவணை தயாரிக்கும் விதம்

  • Insert-Table ஐ தெரிக.
  • போதுமான அளவு வரிகள் மற்றும் நிரல்களை தெரிவு செய்க. அல்லது Insert-Table இல் போது மான அளவு வரிகள் மற்றும் நிரல்களை உட்புகுத்துக.
  • OK இனை சொடக்குக.

அட்டவணையினைத் தயாரிக்க முன்னர் அட்டவணை / வரிகள் / நிரல்கள் / கட்டங்கள் ஆகியவற்றைத் தெரிவுசெய்க.

அட்டவணையிலுள்ள கட்டங்களுக்கிடையே அங்கும் இங்கும் பயணிக்கவென நிலைகாட்டியினைத் தெரிவுசெய்க.