Microsoft-Office-Word

சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளுக்குள் பிரவேசித்தல்

இங்கு Microsoft இனை அடிப்படையாகக் கொண்டு விடயங்கள் முன்வைக்கப் பட்டுள்ளன.

Microsoft Office Word 2010

Start > All Programs – Microsoft Office – Microsoft Office Word 2010 Microsoft Office Word 2010

மென்பொருளின் முகப்பு உரு 6.2 இல் காட்டப்பட் டுள்ளது.

  1. தலைப்புப் பட்டை (Title Bar)

உரு 6.3 இல் காட்டப்பட்டுள்ள Microsoft Office 2010 முகப்பின், மிக உயரத்தில் காட்டப்பட்டுள்ளதே தலைப்புப்பட்டை ஆகும். திறக்கப்பட்டுள்ள ஆவணத்தின் பெயர் இங்கு காட்சிப்படுத்தப்படும். புதிய ஆவணம் Document x எனக் காட்சிப்படுத்தப்படும். x என்பது ஆவணத்தின் இலக்கமாகும். முகப்பினை உள்ளீர்க்கும் சிறுப்பித்தல் பொத்தான் (Minimize Button) அல்லது பெரிதாக்குதல் மற்றும் மீளத்திறத்தல் பொத்தான் (Maximize / Restore), முகப்பினை மூடும் பொத்தான் (Close) போன்றன வலப்பக்க மூலையில் காணப்படுகின்றன.

  1. நாடா (Ribbon)

Word 2010 முகப்பில் காணப்படும் விசேட அம்சமே நாடா (Ribbon) ஆகும். இதி லுள்ள File, Home, Insert etc போன்றன தத்தல்கள் (Tabs) எனப்படும். ஒவ்வொரு தத்தலும் படவுருவாகக் (Icons) காட்சிப்படுத்தப்படுவதும் அதனூடாக அவற்றின் செயற்பாடுகள் தெளிவுபடுத்தப்படுவதும் இதன் சிறப்பம்சமாகும். கணினிப் பயனருக்கு அவசியமான விதத்தில் இப்படவுருக்களை ஒழுங்குபடுத்திக் கொள் ளவும் முடியும். மேலும், இந்நாடா பல்வேறு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

(Clipboard, Font, Paragraph, Styles, Editing etc)

Home ribbon இல் உள்ள சில உறுப்புக்கள்

  1. துரித பிரவேசக் கருவிப் பட்டை (Quick Access Tool Bar)

எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நடாவிற்கு மேலாகவும் துரிதப் பிரவேச கருவிப் பட்டைக்கு கீழாகவும் அமையப்பெற்றிருக்கும். புதிய ஆவணம் ஒன்றைப் பெறல், ஆவணத்தினைச் சேமித்தல் (Save), செய்ததை விடு (Undo), திரும்பச் செய் (Redo) போன்ற மிக அவசரமாகச் செய்ய வேண்டிய உபகரணங்களுடன் கூடிய இத்துரித பிரவேச கருவி பட்டையினைத் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள முடியும்.

  1. சொல்லாடற் பெட்டி நிறுத்துவகை (Dialogue Box launcher)

நாடாவில் உள்ள சில அம்சங்களினூடாகத் தென்படும் உபகரணங்களுக்கு மேல திகமாக பல உபகரணங்கள் இருக்கின்றன என்பதைச் சொல்லாடற் பெட்டி நிறுத்தவகைகளே வெளிப்படுத்துகின்றன. நாடாவினுள் உள்ள பெயருக்கு வலப்பக்கமாக உள்ள அம்புக்குறியின் மூலம் உரிய சொல்லாடற் பெட்டியினைத் திறந்துகொள்ள முடியும். இதன்மூலம் நாடாவில் உள்ள உபகரணங்களுக்கு மேலதிகமாகப் பல உபகரணங்களைப் பெற்று ஆவணத்தினைத் தயாரிக்க முடியும்.

  1. நிலைமைப் பட்டை (Status Bar)

Microsoft Word முகப்பின் இடப்பக்க கீழ்ப்ப குதியில் இது அமைந்துள்ளது. இது ஆவணத்தின் பக்க எண்ணிக்கைகள், சொற்களின் எண்ணிக்கைகள், பயன் படுத்தப்பட்டுள்ள மொழி போன்றவற்றை அவதானிப்பதற்கும் ஆவணத்தில் சிறு மாற்றங்களை செய்வதற்கும் உதவும்

  1. சுருள் பட்டை (Scroll Bar)

ஆவணத்தினை மேலும் கீழுமாக நகர்த்துவதற்கு இது பயன்படுத்தப்படும். 7. உரு அளவு (ZOOM) திரையில் தென்படும் உருக்களின் அளவினை உரு அளவு கட்டளை (Zoom) மூலம் கூட்டிக் குறைக்க முடியும். இச் சந்தர்ப்பத்தில் ஆவணத்தில் எந்த ஒரு மாற்றமும் நிகழமாட்டாது. தட்டச்சு செய்பவரின் விருப்பத்திற்கேற்ப மாற்றங்களைச் செய்யலாம். பொதுவாக ஆவணத்தினை சரவைபார்க்கும்போது (Proofreading) செய்யும்போது உரு அளவு பயன்படுத்தப்படுகின்றது. மேலே கலந்துரையாடப்படாத ஏனைய கருவிகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கு சுட்டி முனையை (Mouse pointer) உரிய உபகரணத்தின் மீது கொண்டுசென்று Tool tip ஐப் பயன்படுத்தி அறிந்து கொள்ளவும்.