வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து தாய்நாட்டுக்கு அதிகம் பணம் அனுப்புவது எந்த நாட்டினர் தெரியுமா? முழு விபரம்

வெளிநாட்டில் தங்கி வேலை செய்பவர்களில் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களே அதிகளவிலான பணத்தை தாய்நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையை International Organization for Migration வெளியிட்டுள்ளது.

அதன்படி உலகளவில் 2019ல் 270 மில்லியன் மக்கள் தங்கள் தாய்நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து அங்கு வாழ்கின்றனர் என தெரியவந்துள்ளது.

இதில் அமெரிக்காவுக்கு தான் அதிகளவு மக்கள் செல்வதும், அதற்கு அடுத்தப்படியாக ஜேர்மனி மற்றும் சவுதிக்கு புலம்பெயர்வதும் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்தவர்கள் பலர் தாய்நாட்டுக்கு பணம் அனுப்புகின்றனர். இந்த பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கடந்தாண்டு 78.6 பில்லியன் டொலர்களை தாய்நாட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த பட்டியலில் சீனா (67.4 பில்லியன் டொலர்கள்) இரண்டாவது இடத்திலும், மெக்சிகோ (35.7 பில்லியன் டொலர்கள்) மூன்றாவது இடத்திலும் உள்ளது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வசிக்கும் 400 கோடி மக்களில் ஒருவர் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புகிற நபராகவோ வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியால் உதவி பெறுபவராகவோ உள்ளனர்.

இந்த பட்டியலில் பிலிப்பைன்ஸ் (34 பில்லியன் டொலர்கள்) நான்காம் இடத்தில் உள்ளது.

இதில் இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால் உலகளவில் பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களில் 40 சதவீதம் பேர் ஆசியாவில் பிறந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.