மின்சாரம் தாக்கி யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உ யிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி  சிவநகர், உருத்திரபுரம் பகுதியில் அரசி ஆலை ஒன்றில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


அரிசி ஆலையில் காணப்பட்ட வெள்ள நீரினை மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்ற முற்பட்டபோது மின்சாரம் தாக்கியதில் குறித்த இளைஞன் உ யிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் யாழ்.பல்கலைக்கழக மாணவனான 22 வயதுடைய விக்னராசா சாரங்கன் எனத் தெரியவருகின்றது.

இவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.