திருமணமான 4ம் நாள் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி முதல் திருமணம் மறைக்கப்பட்டதா?

தமிழகத்தில் திருமணமான 4 நாட்களில் மனைவி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்த கணவர் அதிர்ச்சியடைந்தார்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த சிவராமன் என்பவருக்கு அவர் பெற்றோர் வெகு நாட்களாக திருமணத்துக்கு பெண் தேடியும் கிடைக்காமல் இருந்தது.

இந்நிலையில் கல்யாண தரகர் மூலம் வால்பாறையைச் சேர்ந்த மல்லிகா என்பவரை பெண் பார்த்துள்ளனர்.

பெண் கிடைத்த மகிழ்ச்சியில் திருமணத்துக்காக மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண்ணின் குடும்பத்துக்கு 12 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொடுத்தனர்.

இதையடுத்து அவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்தது.

புதுமண தம்பதிகள் தேனிலவுக்கு செல்ல ஊட்டி, கொடைக்கானலை தேர்வு செய்தனர்.

இந்நிலையில் திருமணமான 4-வது நாளில் புதுப்பெண் வாந்தி எடுத்தார். இதைப்பார்த்த புதுமாப்பிள்ளை புட் பாய்சன் என்று நினைத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு மனைவியை அழைத்து சென்றார்.

அங்கு புதுப்பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் 2 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கணவரிடம் கூற அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் மனைவியுடன் வீட்டுக்கு வந்த சிவராமன் பெற்றோரிடம் அனைத்தையும் கூற அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

பெண் கிடைக்காததால் அவசர கதியில் விசாரிக்காமல் திருமணம் செய்து கொண்டோமே என்று விரக்தி அடைந்த சிவராமன் பொலிசில் புகார் அளித்தார்.

பொலிசார் பெண்ணின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களிடம் விசாரித்த போது மல்லிகாவுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்றும், அதை மறைத்து அவர் இரண்டாவது திருமணம் செய்ததும் தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.