டுவிட்டர் அறிமுகம் செய்யும் மாஸான புதிய வசதி

பல மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டு முன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றாகத் திகழும் டுவிட்டர் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ஒருவருடைய டுவீட்டிற்கு ரீடுவீட் செய்தவர்களில் சிறந்த ரீடுவீட் செய்தவரின் கணக்கினை ஹைலைட் செய்து காண்பிக்கும். இதேபோன்றதொரு வசதியினை பேஸ்புக்கினால் நிர்வகிக்கப்பட்டுவரும் இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இங்கு ஒரே மாதிரியான தரவேற்றங்களை காண்பிப்பதற்காக இவ்வாறானதொரு வசதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இவ்வாறான வசதிகள் மூலம் டுவிட்டரில் ஏற்படக்கூடிய அநாவசியமான டுவீட்கள், போலி தகவல் என்பவற்றினை தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இது வெற்றியளிக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.