Microsoft-Office-Word

சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளைப் பயன்படுத்தி ஆவணமொன்றினைத் தயாரித்தல்

பக்க வடிவமைப்பு (Page Setup)

புதிய ஆவணம் ஒன்றைத் தயாரிக்க முன்னர் அதற்கேற்ப பொருத்தமான ஒரு பக்கத் தைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.

Microsoft Word இல்

Format – Page மற்றும் Page சொல்லாடற் பெட்டியை பயன்படுத்துக.

எந்தவொரு சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளிலும் பொதுவாகப் பயன்படுத்தக் கூடிய விதமான பக்க வடிவமைப்பு உபகரணங்கள் பல காணப் படுகின்றன.

அதாவது சர்வதேச தரத்திற்கு ஏற்பத் தயாரிக்கப்பட்ட பல்வேறு அளவிலான (Size / Format) பக்கங்களைப் பெற்றுக் கொள்ளமுடியும். அதாவது A4, A5, B4, Letter, … என்ற வகையில் பயநருக்குத் தேவையான முறையில் வித்தியாசப்படுத்திக் கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பக்கத்தினை வடிவமைக்கும்போது அதன் திசைகோளையும் (Orientation) பக்க எல்லைகளையும் (Margins) ஆவணத்திற்குப் பொருத்தமான விதமாக அமைத்துக் கொள்ள வேண்டும். ஆவணத் தயாரிப்பில் இரண்டு வகைத் திசைகோள்கள் காணப்படுகின்றன. நிரைத் திசை (Landscape) -, நிரல் திசை (Portrait) | என்பனவே அவையாகும்.

எழுத்து, பந்திகளை வடிவமைத்தல் (Formatting)

தட்டச்சு எழுத்துகள், பந்திகளைத் தட்டச்சுச் செய்வதற்கு முன்னர் அல்லது பின்னர் வடிவமைத்துக்(Formatting) கொள்ளமுடியும். ஆவணங்களை வடிவமைப்பதன் மூலம் அவை தெளிவாகவும் கவர்ச்சிகரமாகவும் அமைகின்றன. நீங்கள் தட்டச்சு செய்ததன் பின்னர் வடிவமைப்பதாயின் முதலில் தட்டச்சுச் செய்து விட்டு பின்னர் அவற்றை வடிவமைக்க வேண்டும். தட்டச்சுச் செய்ய முன்னர் ஆவணத்தை வடிவமைக்க முயலும்போது முதலில் பொருத்தமான வடிவமைப்பினைத் தெரிவுசெய்து தட்டச்சு செய்தல் வேண்டும். அடுத்த ஆவணத்தை செய்ய முன்னர் வடிவமைத்த உபகரணத்தை மூடிவிட வேண்டும்.

தெரிதல் (Select) முறைகள்

ஓர் ஆவணத்தில் பல்வேறு அங்கங்கள் காணப்படுகின்றன. அதாவது எழுத்துகள், வசனங்கள், அலங்காரங்கள், சித்திரங்கள், அட்டவணைகள், வரைபுகள் போன்றன காணப்படும். அவ்வாறே பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வங்கங்களில் மாற்றங்களைச் செய்ய வேண்டி நேரிடும். மாற்றங்களைச் செய்ய முன்னர் உரிய அங்கத் தினைத் தெரிதல் வேண்டும். இதற்கென பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் சில கீழே காணப்படுகின்றன

தனி எழுத்து அல்லது பல எழுத்துகள்சுட்டியைச் சொடக்கியவாறு எழுத்தின் ஊடாக இழுத்துச் 
செல்லவேண்டும். (Drag)
சொல்உரிய சொல்லின் மீது சுட்டியினால் இரட்டை சொடக்கல்
(Double Click) செய்ய வேண்டும்.
பல சொற்கள் உரிய சொற்றொடரின் ஆரம்பச் சொல்லின் மீது சுட்டியைச் சொடக்கி இறுதிச் சொல் வரை சுட்டியை இழுத்துச் செல்ல வேண்டும். (Drag)
வசன ம் உரிய வசனத்தின் ஆரம்பச் சொல்லின் மீது சுட்டியை
சொடக்கி இறுதி வரை இழுத்துச் செல்ல வேண்டும்.
வரி வலப்பக்கம் நோக்கிய வெண்ணிறமான அம்புக்குறி தென்படும் வரை வரியின் ஆரம்பத்துக்கு சுட்டியை எடுத்து செல்லவும். அதைக் கண்டவுடன் ஒரு முறை சொடக்குக.
பந்தி பந்தியின் மீது சுட்டியை வைத்து ஒரே முறையில் மூன்று சொடக்கல் செய்ய வேண்டும். அல்லது பந்தியின் முதலாவது சொல்மீது சுட்டியை சொடக்கி இறுதி வரை இழுத்துச் செல்ல வேண்டும்.
ஆவணம் (Document) * விசைப் பலகையின் Ctrl + A இனை ஒரு முறை
அழுத்துக.
* சுட்டியை சொடக்கி இறுதி வரை இழுத்துச் செல்ல வேண்டும். வசனத்தின் மீது சுட்டியை சொடக்கி வலப்பக்கம் நோக்கிய வெண்ணிற அம்புக்குறிவரும் வரையில் சுட்டியை இழுத்துச் செல்லவும். அதைக் கண்டவுடன் ஒரே முறை சொடக்குக.

பாடம் ஒன்றினை வடிவமைத்தல் (Text Formatting)

இங்கு,

  1.  எழுத்துக்களின் அளவினை மாற்ற முடியும். (Font Size)
  2.  எழுத்துக்களின் அமைப்பினை மாற்ற முடியும். (Font Style) எழுத்தினை தடிப்பாக்கலும் (Bold) சாய்வாக எழுதுதலும் (Italic)
  3.  எழுத்துகளின் கீழ் கோடிடுதல் (Underline)
  4.  வித்தியாசமான எழுத்துக்களை வித்தியாசமான மொழிகளிலிருந்து பெற்றுக்கொள்ளல் (Font)
  5.  எழுத்துகளின் நிறத்தினை மாற்றுதல் (Font Colour)

Microsoft Word இல் உமது பந்தி அல்லது எழுத்தினைத் தெரிக.

  • Home -> Font சதுரத்தினுள் உள்ள உங்களுக்குப் பொருத்தமான வடிவமைப்பு உபகரணத்தின் மீது சொடக்குக.
  • Font சொல்லாடற் பெட்டியைத் (Dialogue Box) திறந்து கொள்க’ அவ்வாறு ஒரே சந்தர்ப்பத்தில் பல உபகரணங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பந்தி வடிவமைப்புச் செய்தல் (Paragraph Formatting)

  • நேர்ப்படுத்தல் Alignment
Alignment
  1.  இடப்பக்கமாக நேர்ப்ப டுத்தல் (Left Align)
  2.  மத்தியில் நேர்ப்ப டுத்தல் (Center Align)
  3.  வலப்பக்கமாக நேர்ப்ப டுத்தல் (Right Align)
  4.  இரு பக்கங்களையும் சமமாக நேர்ப்படுத்தல் (Justify) – உள்தள்ளுதல் (Indentation)
  5.  இடப்பக்கத்திலிருந்து உள்தள்ளுதல் (Left Indentation)
  6.  வலப்பக்கத்திலிருந்து உள்தள்ளுதல் (Right Indentation)
  7.  முதலாவது வரியினை உள்தள்ளுதல் (First Line Indentation)
  8.  முதல் வரி தவிர்ந்த ஏனைய வரிகளை உள்தள்ளுதல் (Hanging Indentation)
  9.  வரி இடைவெளி இடுதல் (Line spacing)
  10.  பந்தி இடைவெளி இடுதல் (Paragraph spacing)

Microsoft Word இல்

உமது சொற்கள் அல்லது பந்திகளைத் தெரிவு செய்க.

  • Home → Paragraph பகுதியிலுள்ள உமது வடிவமைப்புக்குத் தேவையான உபகரணத் தின் மீது சொடக்குக. • Paragraph சொல்லாடற் பெட்டியை (Dialogue Box) திறந்து கொள்க.
  • அதில் உமக்குத் தேவையான உபகரணங்களைத் தெரிவுசெய்க.
  • OK செய்க.

குண்டுக்குறிகள், இலக்கங்களினது (Bullets and Numbering)