சிலியில் காணமால் போன இராணுவ விமானம் விபத்து : 38 பயணிகள் குறித்து தீவிர தேடல்

38 நபர்களுடன் அந்தாட்டிகாவில் உள்ள விமானத்தளத்திற்குச் சென்ற சிலி இராணுவ விமானம் நேற்று திங்களன்று காணாமல் போயுள்ள நிலையில் குறித்த விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

ஹெர்குலஸ் சி 130 என்ற விமானம் அந்நாட்டு நேரப்படி நேற்று முன்தினம் பிற்பகல் 4.55 (19.55 GMT) மணிக்கு புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.

வானில் பறந்துக்கொண்டிருந்த விமானம் திடீரென காணமால் போயுள்ளதாக அந்நாட்டு விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையிலேயே குறித்த விமானம் விபத்துக்குள்ளானதோடு, அதில் பயணித்த 38 பேரின் நிலமை குறித்து அந்நாட்டு அதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.