தைரியமாக சிறுத்தையோடு மோதிய மான் குட்டி.. இறுதியில் கதையே மாறிவிட்டது!

தென் ஆப்பிரிக்காவில் உள்ள குருங்கர் தேசிய பூங்காவில் சிறுத்தையிடம் சிக்கிய மான்குட்டி தன்னை மீட்டுக்கொள்ள நடத்திய போராட்டத்தினை வனவிலங்கு ஆர்வலர் ஆண்ட்ரோ ப்யூரியே என்பவரால் எடுக்கப்பட்ட காணொளி தீயாய் பரவி வருகின்றது.

மாலை நேரத்தில் நையலா என்று அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்க இன மான் குட்டி ஒன்று காட்டில் நடந்து வந்த, பாதையில் சிறுத்தை ஒன்று அங்கு படுத்திருந்துள்ளது.

இதை கண்டு அச்சம் கொள்ளாமல் அந்த மான் குட்டி தப்பிப்பதற்காக அடுத்தடுத்து அந்த சிறுத்தையை ஓங்கி ஓங்கி முட்டிய தருணத்தில் சற்று விளையாட ஆரம்பித்துள்ளது.

இத்துடன் முடியும் இந்த காட்சிக்கு பின்னால் நடந்த சோகக்கதையினை தற்போது தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு விளையாடிக்கொண்டிருந்த மான்குட்டியினை பொறுமையாக சகித்திருந்த அதனை கடித்துக்கொன்று கடைசியில் கவ்விச்சென்றுள்ளதாம். 40 நிமிடத்திற்கு பின்பு நடந்த இதனை குறித்த வனவிலங்கு ஆர்வலர் கூறியுள்ளார்.