கோழியை பிடித்த மலைப்பாம்பை மடக்கிப்பிடத்த இளைஞர்கள்

குடியிருப்பு பகுதியில் புகுந்து கோழியை விழுங்கிக் கொண்டிருந்த மலைப் பாம்பை, இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணா மலைப்பட்டியில் வசிப்பவர் ரபீக். இவருடைய வீட்டின் பின்புறத்தில் இருந்து, கோழி கத்தும் சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அங்கு சென்று பார்த்தபோது, மலைப்பாம்பு ஒன்று கோழியை பிடித்து விழுங்கிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

திரண்டு வந்த இளைஞர்கள், அந்த மலைப் பாம்பை லாகவமாகப் பிடித்து, சாக்கு பையில் அடைத்து கட்டி வைத்துவிட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள், அந்த பாம்பை மீட்டு ஆய்வு செய்தனர். அப்போது அந்த மலைப் பாம்பு, 10 அடி நீளமும் 20 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது தெரியவந்தது.

பின்னர் அந்த பாம்பை, நார்த்தாமலை பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

குடியிருப்பு பகுதிக்குள் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு பிடிபட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.