Microsoft-Office-Access

கைமுறை தரவுத்தளம் ஒன்றை உருவாக்குதல்

தரவு வகை :

ஓர் புலத்துடன் தொடர்புடைய தரவை வகைகுறிக்க தாவுவகை பயன்படுத்தப்படும். அதிகமாகப் பயன்படுத்தப்படும் தரவு வகைகளில் சில பின்வருமாறு.

எண்சார் (Numeric) = எண்கணிதக் கணிப்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது பல்வேறுபட்ட வகைகளில் காணப்படுகிறது.

  • Integer (நிறையெண்) – தேர் அல்லது மறை குறி கொண்டதாகக் காணப்படும் நிறையெண்கள் (உதாரணம்:- 12, – 23)
  • Real (மெய்யெண்) | நேர் அல்லது மறை குறி கொண்டதாகக் காணப்படும் தசமதானப் பெறுமதிகள் (உதாரணம் 8.125, -2.64, 4.00)

பாடம் (Text) / எழுத்துக்கள், எண்கள் அல்லது விசேட குறியீடுகள்(%,*,-) கொண்ட. எண்கள் பயன்படுத்தப் படினும் எண்களை கணிப்புகளுக்கு உட்புகுத்த முடியாது. (உதாரணம் : தேசிய அடையாள அட்டை இலக்கம் 889534731V தொலைபேசி இலக்கம் 0112785123, 0112-785123)

நாணயம் (Curency) = நாணயமாற்றுப் பெறுமதிகளை வகைகுறிக்க பயன்படுத் தப்படும் (உதாரணம் : $ 12.45, Rs 35.00)

திகதி / நேரம் (Date /Time) = திகதியையும் நேரத்தையும் வகைக்குறிக்க பயன்படுத்தப்படும். (உதாரணம் : 12/23/2013, 7.35 a.m)

பூலியன் (Boolean) : உண்மை (True) பொய் (False) போன்ற இரு பூலியன் logical தர்க்கவியல்) பெறுமதிகளை மாத்திரம் வகை குறிக்கப் பயன்படுத்தப்படும். புலத்தின் பருமன் அப் புலத்தில் பதிவு செய்யப்படும் தரவுகளின் வகை, தரவு களின் எண்ணிக்கை போன்ற காரணிகளை அடிப்படை யாகக் கொண்டு மாற்றமடையலாம்..

உதாரணம் :

[புலப்பெயர் (நிரலின் பெயர்) பாடத்தின் பெயர் பாடத்தின் குறி]

[புலத்தின் பருமன் (புலத்தின் அளவு) 15]

அட்டவணையொன்றை உருவாக்கும் போது புலத்துக்குப் பொருத்தமான தரவு வகையைத் தெரிவுசெய்ய வேண்டும்.