என்கவுன்டர் எதுக்கு? பிக் பாஸ் பிரபலத்தின் அதிரடியான கருத்து

நாடு முழுவதையும் அதிர வைத்த பிரியங்கா படுகொலை வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொள்ளப்பட்டனர்.

இந்த சம்பவம் பொலிஸார் மீது மக்களுக்கு பாரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.

பொது மக்களும் யாரும் இனிமேல் செய்ய முடியாத அளவுக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தி வந்தார்கள்.

இந்நிலையில் பொலிஸார் 4 பேரையும் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றார் என்று கூறப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ரித்திவிகா ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியது, மறைமுக தண்டனைகள் எதற்கு? இப்படி பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு குறுகிய காலத்தில் முறையான விசாரணைக்குப் பிறகு வெளிப்படையாக மரண தண்டனை விதிக்கலாம்.

சட்டத்தின் மூலம் சட்டம் இவர்களை தண்டிக்கலாம் என்று கூறியிருந்தார். இவருடைய கருத்துக்கு பல பேர் பாராட்டுகளையும்,இதை சட்டம் ஆக்கலாம் என்றும் பல விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். உண்மையிலேயே இந்த மாதிரி மிருகங்கள் நாட்டில் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள்.

இவர்களுக்கு மரண தண்டனை மட்டும் தான் சரியான தீர்ப்பு என்றும் கூறிவருகிறார்கள். இனிமேல் இந்த மாதிரியான கோர சம்பவம் எங்கும் நடைபெறாத இருப்பதற்கு இந்த என்கவுண்டர் முன்னுதாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த மாதிரியான தீர்ப்புகள் வந்தால் தான் நாட்டில் பெண்களுக்கு நடக்கும் அநியாயம் ஒழிக்கப்படும் என்று கூறி வருகிறார்கள்.