இலத்திரனியல் விரிதாள் மென்பொருள் பற்றிய அறிமுகம்

அறிமுகம்

மக்களது அன்றாட கருமங்களுக்கு மட்டுமன்றி தொழில் ரீதியான தேவை களுக்கும் பல்வேறு கணித்தல்களைச் செய்வது அவசியமாகும். இந்தக் கணித்தல்களைச் செய்வதற்கு மக்கள் பல்வேறு உபாயங்களைப் பயன்படுத்துகின்றனர். கணித்தலுக்கான பிரச்சினங்களின் தன்மைகளைப் பொறுத்து பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. கணித்தல்களுக்கென மனதையும் விரல்களையும் உபயோ கிக்கின்றனர். சிக்கலான கணித்தல்களைத் தீர்ப்பதற்கு எழுதிதீர்த்தல் அல்லது கணித்தற் பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், இந்தக் கணித்தல் பணிகளை செம்மையாகவும் இலகுவாகவும் செய்வதற்கென இலத்திரனியல் விரிதாள்களை எவ்வாறு பயன்படுத்தலாமென்பது பற்றி அறிந்துகொள்வோம். முறையாகவும், எழுத்து மூலமும் கணித்தல்களைச் செய்வதற்காக கணிதத் தாள்களை பயன்படுத்துவது எமது வழமையாகும். இத்தாள்கள் நிலைக்குத்து நிரல்களையும் கிடையான நிரைகளையும் கொண்டுள்ளன. இதன் அடிப்படையிலேயே பெறுமளவு நிரல்களையும் நிரைகளையும் கொண்ட இலத்திரனியல் விரித்தாள்கள் அமைக்கப்பட்டுள்ளன. இலத்திரனியல் விரிதாள்களைப் (Electronic Spreadsheets) பயன்படுத்துவதன் மூலம் பின்வரும் பணிகளை மிக இலகுவாகவும் நேர்த்தியாகவும் செம்மையாகவும் செய்யமுடியும்.

  • இலகுவானதும் கடினமானதுமான கணித்தல்களைச் செய்தல்.
  • வரைபுகள் மூலம் தரவுகளை விளக்குதல் .
  • தரவுகளை ஒழுங்குப்படுத்திக் காட்டுதல்.
  • தேவையான தரவுகளை மாத்திரம் பிரித்தெடுத்தல் .
  • தரவுகளின் நம்பகத் தன்மையினை பரிசீலித்தல்.
  • கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி தரவுகளைப் பாதுகாத்தல்

இலத்திரனியல் விரிதாள் மென்பொருள்கள்

பல்வேறு மென்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இலத்திரனியல் விரிதாள் மென்பொருள்கள்.  

மென்பொருளின் பெயர் உற்பத்தி நிறுவனம்
Excel 2010 Microsoft Comporation
Numbers Apple Inc
Libre Office Calc The The Document Foundation
Open Office Calc Apache Foundation

 

விரிதாள் மென்பொருள்களில் Microsoft Office 2010 மற்றும் LibreOffice Calc ஆகிய மென்பொருகள் பற்றி மாத்திரமே இப்பகுதியில் கலந்துரையாடப்படுகின்றது. மென்பொருள்களைத் தொழிற்படச் செய்யும் முறைகள் அவற்றின் செயற்பாட்டு முறைமைகளின் அடிப்படையில் வேறுபடலாம்.

Microsoft Office உற்பத்திகள் அனுமதிப்பத்திரத்துடன் கொள்வனவு செய்யப்பட வேண்டும். Libre Office உற்பத்திகளை இலவசமாகப் பயன்படுத்த முடியும்.